சாதாரண குடிமக்களே இந்தியாவைச் செதுக்குகின்றனர் என்று குடியரசுத் தலைவராக பதவியேற்று ராம் நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார். நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம் நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜக்தீஷ் சிங் கெஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதன்பின், குடியரசுத் தலைவராக பதவியேற்று கொண்ட ராம் நாத் கோவிந்த் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “மண் குடிசையில் பிறந்த தாம் இன்று நாட்டின் மிக உயரிய பதவியான ஜனாதிபதி பதவிக்கு வந்துள்ளேன் மிகவும் ஏழ்மையில் பிறந்த எனது வாழ்க்கை பயணம் மிக கடுமையானது. சாதாரண குடிமக்களே இந்த நாட்டை செதுக்குகின்றனர். முந்தைய குடியரசுத் தலைவர்களின் வழயில் தமது பணியை திறம்பட செய்வேன். முழுமையான வளர்ச்சியையே அம்பேத்கர் விரும்பினர். எனவே அம்பேத்கரின் எண்ணத்தை ஈடேற்றுவோம். குடியரசுத் தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பை பணிவுடன் ஏற்றுக் கொண்டு, அடக்கத்துடன் செயல்படுவேன்.
பல சமயங்கள், ஜாதிகள் இருந்தாலும் கூட நாட்டு மக்கள் ஒற்றுமையாக உள்ளனர். இப்படிப்பட்ட பெருமை மிகு இந்தியாவின் குடியரசுத் தலைவராகியுள்ளதற்கு பெருமைப்படுகிறேன். விவசாயத்தில் ஆண்களோடு அதிகமாக பெண்களும் கடுமையாக உழைக்கின்றனர். நாட்டின் வளர்ச்சியில் அரசாங்கம் மட்டுமே காரணியாக இருக்க முடியாது, மக்களின் பங்களிப்பு மிக அவசியமானது. குடியரசுத் தலைவர் பொறுப்பை எமக்கு வழங்கிய அனைவருக்கும் நன்றி. அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன்.” என்றுள்ளார்.
Home
»
India
»
சாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசுத் தலைவராக பதவியேற்று ராம் நாத் கோவிந்த் உரை!
Tuesday, July 25, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment