நீட்’தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு டெல்லி சென்றார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர், நேற்று செவ்வாய்க்கிழமை காலை பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பின்னர் அங்குள்ள மைய மண்டபத்தில் நடைபெற்ற புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.
தமிழ்நாடு இல்லம் திரும்பிய எடப்பாடி பழனிசாமி அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரும் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.
தமிழ்நாட்டில் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு தி.மு.க. ஆட்சியில்தான் அனுமதி வழங்கப்பட்டது. கதிராமங்கலத்தில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அது பழைய திட்டம்தான். தற்போது அங்கு எண்ணெய் குழாய்களில் பழுது ஏற்பட்டு உள்ளது. அதில்தான் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த விசயத்தில் தமிழ்நாடு அரசு எப்போதும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும்.
தமிழ்நாட்டில் 2 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு என்றும், அதனால்தான் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் அய்யாக்கண்ணு சொல்வது தவறு. தமிழகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. விவசாயிகள் மத்திய அரசை வலியுறுத்தி தான் போராட்டம் நடத்துகிறார்கள்.” என்றுள்ளார்.
Home
»
Tamizhagam
»
‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்: மோடியிடம் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தல்!
Wednesday, July 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment