Monday, July 24, 2017

ஆன்லைன் டிக்கெட் மூலம் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் கட்டண சர்வீஸ் சார்ஜ் ஆக முப்பது ரூபாய் வாங்குகிறார்கள். இதன் மூலம் கிடைத்த வருவாய் 100 கோடியை தாண்டிவிட்டதாக காதை கடிக்கிறது கோடம்பாக்கம்.

இதில் தயாரிப்பாளருக்கு பத்து பைசா லாபமில்லை.

ஆனால் தியேட்டர்காரர்களுக்கு மட்டும் கூட்டு சம்பாத்யம் என்ற நிலையில், இந்த ஆன்லைன் டிக்கெட் விஷயத்தை விஷம் கொத்தி பாம்பாக கருத ஆரம்பித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

இப்படியே ரசிகர்களின் பாக்கெட்டை சுரண்டினால், சினிமாக்காரர்கள் சுண்டல் விற்றால் கூட சீண்ட ஆளிருக்காது.

தொடர்ந்து கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, தனது தியேட்டரில் செய்யப்படும் ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் இல்லை என்று அறிவித்துவிட்டார் அபிராமி மால் ராமநாதன்.

கஷ்ட நேரத்திலும் ஒரு இஷ்ட நேரமாக இதை பார்க்கும் சங்கம், திருப்பூர் சுப்ரமணியனும் இதை செய்ய வேண்டும் என்று முணுமுணுக்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer