Tuesday, July 4, 2017

சிம்பு நடித்த ‘ஏஏஏ’ படம் ஒருவழியாக வெளியாகிவிட்டது. சென்னையில் புதிதாக திருத்தப்பட்ட ஒரு தியேட்டரில்  சுமார் 300 டிக்கெட்டுகளை வாங்கியவர் அதை தன் ரசிகர்களுக்கு கொடுத்து வயிறு சுளுக்குகிற அளவுக்கு விசிலடிக்க சொல்லிவிட்டார்.

இதையெல்லாம் கரெக்டாக செய்யும் அவர் படப்பிடிப்புக்கு வருகிற விஷயத்தில் மட்டும் எப்போதும் ஒரே மாதிரிதான்.

இந்தப்படத்திலும் அப்படியொன்று நடந்ததாக காதை கடிக்கிறது வட்டாரம். அதிகாலை சன் ரைஸ் ஷாட்டுக்காக சிம்புவை கேட்டார்களாம்.

“காலையில எப்படிய்யா வர்றது. ஏதாவது சி.ஜியில செட் பண்ணிக்குங்க” என்றாராம்.

வேறு வழியில்லாத டைரக்டர், “உங்க வீட்டு மொட்டை மாடியிலேயே ஷுட்டிங்கை வச்சுக்கலாம். ஆறு மணிக்கு வாங்க” என்று கூறி, யூனிட்டை நாலு மணிக்கே அவர் வீட்டு மொட்டை மாடியில் ஏற்றிவிட்டார்.

சிம்பு வந்தாரா? மண்ணாங்கட்டி.... மதியம் ஒரு மணிக்கு வந்தாராம். கெரகம் நிக்காதுன்னு தெரிஞ்சும் தலையில வச்சா இப்படிதான். யாரை நோகறது?

0 comments :

Post a Comment

 
Toggle Footer