குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 65 வீதமான வாக்குகள் கிடைத்தன. எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமார் 32 வீதமான வாக்குகள் பெற்றார். 3 வீதமான வாக்குகள் செல்லாமல் போயின.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் முடிகிறது. இதனையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராம் நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர். குடியரசுத் தலைவர் தேர்தல் பாராளுமன்றம் உட்பட நாடு முழுவதும் 32 வாக்குப்பதிவு மையங்களில் கடந்த 17ஆம் தேதி நடந்தது.
776 பாராளுமன்ற உறுப்பினர்கள், 4,120 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த தேர்தலில் ஓட்டுப் போட தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகின. பிற மாநிலங்களில் இருந்து வாக்கு பெட்டிகள் டெல்லியில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் முடிவில், ராம் நாத் கோவிந்த் வெற்றி பெற்றார்.
Thursday, July 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment