Thursday, July 20, 2017

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பு போராட்டத்தில் 2 -ம் கட்டத்தின் 100 -வது நாள் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது..

தமிழகத்தில் அரசு நடப்பது போல தெரியல. எப்போது எந்த கூட்டத்துக்கு சென்றாலும் மகிழ்ச்சியாக செல்வேன். ஆனால் நெடுவாசலுக்கு தான் வருத்தத்துடன் வந்திருக்கிறேன். 100 நாட்கள் மக்களை போராட செய்தது யார் குற்றம். அரசுகளின் குற்றம் தானே.

எச்.ராஜா போராட்டத்தை தூண்டிவிடுவதாக சொல்லி வருகிறாரே என்ற கேள்விக்கு..
இந்த எச். ராஜா யாருங்க. அவரை யாருக்கு தெரியும். முதல்ல அவரை ஒரு தேர்தல்ல நின்னு ஜெயிச்சுட்டு வரச் சொல்லுங்க.

அப்பறம் நடிகர் கமலை பற்றி பேசிவருகிறார். அவரைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கு. எச்.ராஜா தேர்தல்ல நிற்கட்டும் அந்த தொகுதியில கமலை நிறுத்துறேன் ஜெயிக்க முடியுமா?

கமல் நெடுவாசல் பிரச்சனைக்காக என்ன செய்தார் என்று எச்.ராஜா கேட்கிறாரே?

கமல் இலங்கை தமிழர் பிரச்சணைக்காக வேனில் நின்று பேசியதை நானே பார்த்திருக்கிறேன். இப்ப ஒரு நடிகன் நேரடியாக வரவேண்டும் என்பதில்லை. ஒரு அறிக்கை கூட போதுமானது.

முதல்ல அரசியல்வாதிகள் ஓட்டுப்போட்ட மக்களை பார்க்க தொகுதிப்பக்கம் வாங்க. அமைதி அமைதின்னு சொல்லிட்டு போலிஸ் பாதுகாப்போடு போறதா அமைதி. மக்கள் முன்னால போக உங்களுக்கு எல்லாம் பயம். அதனால தான் எங்கிருந்தாவது பேசிட்டு போறீங்க. இவ்வாறு கூறினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer