Saturday, July 8, 2017

அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் முதல் பார்வை போஸ்டர், டீஸர், Surviva ஒற்றைப்பாடல் என்று வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், விவேகம் படத்தின் படக்குழுவினர் அடுத்த ஒற்றைப் பாடலை வருகிற ஜூலை 10 அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர். தலை விடுதலை என்ற தலைப்புடன் வெளியாகும் இப்பாடலை இயக்குனர் சிவா எழுதியுள்ளார். இந்த தகவலை விவேகம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதற்குமுன் வெளியாகி இருக்கும் SURVIVA பாடல் gaana, saavn போன்ற இசை வலைத்தளங்களில் இன்னும் முதலிடம் வகிக்கிறது. Surviva பாடலில் " பாடங்கள் கற்றதால் விழவிழ நான் எழுவேன்" , "முதுகெலும்பு சிதைந்தும், My Game Is Beyond Pain"  போன்ற வரிகள் அஜித்தின் வாழ்க்கைப்  பயணத்தை விவரிக்கும் முறையில் அமைக்கப்பட்டிருந்தது.

படத்தைப் பற்றி அக்க்ஷரா ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இறுதியாக படப்பிடிப்பு முடிந்தது. என்னை இப்படத்தில் இணைத்ததற்காக இயக்குனர் சிவா அவர்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருந்த அஜித் அவர்களுக்கும் எனது நன்றி. நான் இப்படத்தின் மூலம் உயர்ந்திருக்கிறேன். நான் இதுவரை பார்த்ததில் கடுமையாக உழைப்பவர்கள் விவேகம் படத்தின் படக்குழுவினர், அவர்களுக்கும் எனது நன்றிகளும், பாராட்டுகளும்” என அக்க்ஷரா ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.

தலை விடுதலை பாடலை நோக்கி அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer