மறுபடியும் லைம் லைட்டுக்கு வந்துவிட்டார் அஞ்சலி. நடுவில் சில பல அச்சுறுத்தல் காரணமாக ஆந்திராவில் செட்டிலானவர், எப்படியோ பிரச்சனையை சமாளித்து மீண்டும் சென்னைக்கு திரும்பிவிட்டார். இக்கட்டான சுச்சுவேஷனில் அஞ்சலி விவகாரத்தை தீர்த்து வைத்த பலசாலி யாரோ?
அவருக்கு தமிழகம் சார்பில் ஒரு கரகாட்டமே நடத்தலாம். தானுண்டு தன் நடிப்புண்டு என்று இருந்த அஞ்சலிக்கு கல்யாண ஆசை வந்திருக்கிறது.
‘அஞ்சலிக்கும் அவரது நெடுநாள் காதலரான நடிகர் ஜெய்க்கும் இன்னும் சில வாரங்களில் திருமணம். அதுவும் திருப்பதியில்...’ என்று தகவல்கள் வர... மீடியாவுக்கு கை காலேல்லாம் பரபர. ஆனால் செய்தியை உறுதிப்படுத்த வேண்டிய அஞ்சலி, யார் போனிலும் சிக்கவில்லை என்பதுதான் சிக்கல்.
ஜெய் முஸ்லீமாக மதம் மாறி பல வருஷங்கள் ஆச்சு. அஞ்சலிக்காக அவர் மாறப் போகிறாரா, அல்லது ஜெய்க்காக அஞ்சலி மாறப் போகிறாரா? யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க சாமீய்...
Thursday, July 6, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment