Wednesday, July 19, 2017

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பயணப்படி உள்ளிட்ட படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளதாக அவர் இன்று புதன்கிழமை சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதுவரை தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் 55 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இந்தச் சம்பளம், கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு 1.05 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியும் 2 கோடியில் ரூபாயில் இருந்து 2.50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியமும், 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 8 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு 20 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer