பாரதீய ஜனதா மதுரை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று விருதுநகர் வந்திருந்த பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்கள் சந்திப்பில்,
“தமிழகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு பாரதீய ஜனதா கட்சி போராடி வருகிறது. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியை இன்னும் அதிகரித்து, இன்னும் பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு செயல்படுத்திய பிறகு, எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்தி இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து” என்றவர், நடிகர் கமல்ஹாசன் குறித்த கேள்விகளுக்கு சரவெடியாய் வெடித்தார்.
“ஊழலை நாங்களும் எதிர்க்கிறோம். கமல்ஹாசன் எதற்காக ஊழலை எதிர்க்கிறார்? எந்த நேரத்தில் எதிர்க்கிறார்? எந்த நோக்கத்திற்காக எதிர்க்கிறார்? எந்த கொள்கைக்காக எதிர்க்கிறார்? ஒரு பக்கம் கலாச்சார சீரழிவுக்கு காரணமாக இருந்து கொண்டு, ஒரு சார்பான கருத்துக்களைக் கூறுவது சரியல்ல. மற்றபடி அவர் அரசியலுக்கு வருவது குறித்து பா.ஜ.க.வுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கமல்ஹாசன் வந்துதான் தமிழக அரசியலைக் காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலையில் தமிழக அரசியல் இல்லை. தமிழக அரசியலைப் பார்த்துக்கொள்வதற்கு பல தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் துறை சார்ந்த குற்றச்சாட்டுக்களையே அவர் சரி செய்யவில்லை. ஏன் போன வருடம் அவர் ஊழல் குறித்துப் பேசவில்லை? இப்போது என்ன திடீர் ஞானோதயம்? உண்மையிலேயே சிறுமை கண்டு பொங்குவாய் என்றால், எவ்வளவோ சிறுமை வந்தபோது ஏன் பொங்கவில்லை? கமல்ஹாசனை யாரும் கையைக் கட்டிப் போடவில்லை; காலைக் கட்டிப்போடவில்லை; வாயைக் கட்டிப்போடவில்லை. இந்தி எதிர்ப்பு காலத்திலேயே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று சொல்கிறார். உண்மையிலேயே இந்தி எதிர்ப்பு அவர் மனதில் கனன்று கொண்டிருந்தால், இந்தி படங்களில் அவர் நடித்திருக்கக் கூடாது.” என்றார் விழிகளை உருட்டியபடி.
Thursday, July 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment