யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதாக கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராராஜன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை நேற்று வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசினார்.
கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சினேகிதபூர்வமான இந்த சந்திப்பில் மாகாணத்தின் தேவைகள் மற்றும் போருக்கு பின்னரான மக்களின் வாழ்க்கை நிலவரங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
Saturday, July 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment