யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண உப பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்தசனிக்கிழமை நல்லூரில் நடைபெற்ற தாக்குதலின் போது உயிர் நீத்தபொலிஸ் சாஜன்ட் சரத் ஹேமசந்திரவின் மறைவுஎம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடமையில் ஈடுபட்டிருந்த போது உயிர் நீத்தபொலிஸ் அலுவலரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் அதேநேரத்தில் வன்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அருமந்த ஒருஉயிரைப் பறித்தமையால் அன்னாரின் குடும்பம் பலவித இன்னல்களுக்கும் இடர்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி வந்துள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்களின் உள்ளெண்ணம் பற்றித் தாம் ஆராய்ந்துவருவதாக வடமாகாண உப பொலிஸ்மாஅதிபர் தெரிவித்துள்ளார். இந்ததாக்குதல் சம்பந்தமாக உரியநடவடிக்கை எடுக்குமாறு அவருக்குப் பணித்துள்ளேன்.” என்றுள்ளது.
Home
»
Sri Lanka
»
நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்!
Monday, July 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment