ரஜினி அமெரிக்காவில் சிகிச்சை முடித்து சென்னை திரும்பி ஒரு வருஷம் நெருங்கப் போகிறது. மீண்டும் செக்கப்புக்காக செல்ல வேண்டும். வந்த பின்புதான் முழு வேகத்தில் அரசியலில் ஈடுபடப் போகிறாராம்.
அநேகமாக அது சொந்தக்கட்சியாகதான் இருக்கும் என்கிறது சோர்ஸ்.
ரஜினியின் அமெரிக்கப் பயணம் எப்போது? அங்குதான் சஸ்பென்ஸ். தனது பயணத்தை மிக மிக ரகசியமாக வைத்திருக்கும் அவர், காலா ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்தே கிளம்பிவிடும் உத்தேசத்திலிருக்கிறாராம்.
அதற்கு முன்பாக தனக்காக யூ ட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குரல் கொடுத்தவர்களிடம் ஒரு சந்திப்பை நிகழ்த்த விரும்பிய ரஜினி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை சந்தித்து வருகிறார் என்பதுதான் ஊக்கச் செய்தி!
Saturday, July 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment