ரோமில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக வத்திக்கானில் மனிதனால் அமைக்கப் பட்ட நூற்றுக் கணக்கான நீரூற்றுக்கள் (Fountains) மூடப்பட்டுள்ளன.
ரோமின் மத்தியிலுள்ள மிகச்சிறிய நாடான வத்திக்கான் சிட்டியில் இவ்வாறு மூடப்பட்ட நீரூற்றுக்களில் புனித பீட்டர்ஸ்பர்க் சதுக்கத்தில் உள்ள 2 பாரிய நீரூற்றுக்களும் கூட அடங்குகின்றன. கடந்த 2 வருடங்களாக மிகக் குறைந்த மழைவீழ்ச்சியைப் பெற்று வந்த ரோமில் தண்ணீரைச் சேகரிப்பதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ரோம் நகரில் உள்ள மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தினசரி 8 மணித்தியாலத்துக்கு மாத்திரமே தற்போது தண்ணீரைப் பெற்று வருகின்றனர்.
உலகில் வாழும் சுமார் 1.2 பில்லியன் கத்தோலிக்கர்களின் ஆன்மிகத் தலைமையிடமான வத்திக்கானில் வரலாற்றில் முதன் முறையாக வறட்சி காரணமாக நீரூற்றுக்கள் மூடப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் ஜூலையில் ரோமில் பெய்த பருவ மழை கடந்த வருடத்தை விட 72% வீதம் குறைவு ஆகும். இந்நிலையில் ரோம் நகருக்கு உதவியாக வீணாகச் செலவழியும் தண்ணீரை மிச்சம் பிடிக்கும் விதத்தில் வத்திக்கானில் 100 நீரூற்றுக்களை மூடுவதற்கு பாப்பரசர் பிரான்சிஸ் எடுத்த முடிவு அவர் சுற்றுச் சூழல் தேவைக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றார் என்பதைப் பிரதிபலிப்பதாக வத்திக்கான் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Tuesday, July 25, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment