Tuesday, July 18, 2017

பிக் பாஸ் போட்டியில் இருந்து நடிகை ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். நடிகை அனுயா, நடிகர்கள் ஸ்ரீ, கஞ்சா கருப்பு, பரணி ஆகியோரைத்தொடர்ந்து நடிகை ஆர்த்தி பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

14 போட்டியாளர்கள், 30 கேமராக்கள், 100 நாட்கள், ஒரே வீடு என்ற பரபரப்பான விளம்பரத்துடன் ஜூன் 25ம் தேதியில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை துவக்கியது விஜய் டிவி.  வாரத்தின் 5 நாட்களில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களைப்பற்றி ஒளிப்பரப்பாகிறது.   வாரத்தின் கடைசி தினங்களாக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் மேடையில் தோன்றி அந்த வாரத்தின் நிகழ்வுகளை அலசுகிறார்.  போட்டியாளர்களின் வாக்குகள் மற்றும் நிகழ்ச்சியை பார்த்து வரும் ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் அந்த வாரத்தில் போட்டியாளர்களில் இருந்து ஒருவரை வெளியேற்றி அறிவித்து வருகிறார்.

நிகழ்ச்சி துவங்கிய சில தினங்களிலேயே உடல்நிலை சரியில்லாக காரணத்தினால் பிக் பாஸ் வீட்டிலிருந்து நடிகர் ஸ்ரீ வெளியேற்றப்பட்டார்.  அந்த வாரத்தில் நடிகை அனுயா வெளியேற்றப்பட்டார்.  இதற்கு அடுத்த வாரம் நடிகர் கஞ்சா கருப்பு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே நடிகர் கஞ்சா கருப்புவுக்கும் நடிகர் பரணிக்கும் வாக்குவாதம் அதிகமாகிக்கொண்டே போனது.  ஒருகட்டத்தில் பரணியை சிலிண்டரை தூக்கி அடிக்கப்பாய்ந்தார் கருப்பு. இந்த பிரச்சனையினால்  மக்களிடம் செல்வாக்கு இழந்து, வாக்குகள் பெறாமல் வெளியேறினார் கருப்பு.  ஆனால் மக்களிடம் அதிக வாக்குகள் பெற்று போட்டியில் தொடர்ந்த பரணி, சக போட்டியாளர்கள் தன்னை வெறுத்து ஒதுக்கியதால் தனிமை தாங்க முடியாமல் மனம் நொந்துபோய், சுவர் ஏறிக்குதித்து தப்பிக்க முயற்சித்தார்.  இந்த காரணத்தினால் கருப்பு வெளியேற்றப்பட்ட மறு தினமே பரணியும் வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் வெளியேற்றப்படும் பட்டியலில் நடிகைகள் ஓவியா, ஆர்த்தி, நடிகர் வையாபுரி மற்றும் ஜூலி இருந்தார்கள்.

ஒவியாதான் வெளியேற்றப்பட வேண்டும் என்று போட்டியாளர்களின் வாக்குகள் அதிகமாக இருக்கிறது. ஆனால், மக்கள் அவர் தொடர்ந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்று போதிய வாக்குகள் அளித்துள்ளதால் அவர் போட்டியில் நீடிப்பதாக கமல் அறிவித்தார். அதே போல் வையாபுரியும் அதிக வாக்குகள் பெற்று போட்டியில் நீடிக்கிறார்.

ஜூலியை ஆரம்பத்தில் இருந்தே தேவையில்லாமல் சீண்டிக்கொண்டிருக்கும் ஆர்த்தி மேல் மக்களுக்கு அதிக வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவருக்கு மக்கள் ஆதரவு அதிகம் இல்லாததால் அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார். மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று ஜூலி தொடர்ந்து  போட்டியில் நீடிக்கிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer