வடமராட்சி கடலேரி நீர் வளத்தினை அபிவிருத்தி செய்வதன் மூலம் யாழ். குடாநாட்டிற்கு தேவையான குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்பிரகாரம், புதிய செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் யாழ் மற்றும் தீவகத்தில் 16 பல்வேறு நீர்வளத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இவற்றின் மூலம் குழாய் நீர்வசதிகளை இந்த பிரதேசத்தில் உள்ள சுமார் 6 இலட்சம் மக்களுள் 9 சதவீதமானவர்களுக்கே வழங்க முடிந்துள்ளது.
பொருத்தமான நீர் விநியோத்தை யாழ் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்துவதில் தடைகள் இருந்து வருகின்றன. இதற்கு தீர்வாக கடல்நீரை சுத்திகரித்து அதன்மூலம் குடிநீரை வழங்குவதற்காக நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைப்பதற்கு தற்பொழுது அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.
இதற்கு மேலதிகமான வருடத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த பிரதேசத்தில் பெய்யும் மழையினால் வடமராட்சி கடலேரியில் சுமார் 10 கிலோமீற்றர் சதுர பரப்பில் அந்த நீரை சேகரித்து இதன்மூலம் குடிநீர் வள திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை தொடர்பில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள சாத்தியக்கூற்றிக்கை தொடர்பிலான தரவுகள் மற்றும் தகவல்களை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அரச நிறுவனம் மற்றும் வடக்கு மாகாண சபையுடன் இணைந்து இது தொடர்பில் பூரணமான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
வடமராட்சி கடலேரியைப் பயன்படுத்தி யாழ். குடாநாட்டிற்கு குடிநீரைப் பெற்றுக்கொள்ள திட்டம்!
Thursday, July 13, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment