Thursday, July 20, 2017

காணாமற்போனோர் பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, “நாட்டில் நிலையான சமாதானத்திற்கு மற்றுமோர் படியாக இது அமையும்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காணாமற்போனோர் பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்டமூலம் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி தயாரிக்கப்பட்டு, மே மாதம் 27ஆம் திகதி வர்த்தமானி (Gazatte) அறிவிப்பும் வெளியாகியிருந்தது.

எனினும், நீண்ட இழுபறியின் பின் குறித்த சட்டமூலம் கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, ஜனாதிபதி குறித்த சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், குறித்த சட்டமூலம் நடைமுறைக்கு வருகின்றது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer