சங்கமித்ரா படத்திலிருந்து வெளியேறிய ஸ்ருதிஹாசன், தான் ஏன் அப்படத்திலிருந்து வெளியேறினேன் என்பதற்கு சொன்ன காரணங்கள் பிரச்சனையில் மேலும் கொஞ்சம் நெருப்பை அள்ளிப் போட்டுவிட்டது. அவரா வெளியேறல. நாங்கதான் நீக்குனோம் என்று பட நிறுவனம் மேலும் கொஞ்சம் பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில்தான், இந்த படம் வராது. ஆரம்பத்திலேயே டிராப் ஆகிடும் என்று தனக்கு நெருக்கமான வட்டத்தில் பற்ற வைத்தாராம் ஸ்ருதி.
அவர் சொல்ல சொல்லதான் வண்டி வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. எப்படி? ஸ்ருதிக்கு பதிலாக உடனடியாக ஒருவரை புக் பண்ணி, அந்த செய்தியை வெளியே கசிய விட நினைத்தார்கள்.
அவர்கள் நினைப்புக்கு ஃபுல் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார் ஹன்சிகா. ஸ்ருதி இடத்தில் இப்போது வாள் சுழற்றப் போகிறவர் ஹன்சிகாதானாம். இதென்னடா வாள்களுக்கு வந்த சோதனை?
Saturday, July 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment