இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நட்சத்திரமாக பார்க்கப்படும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். அதை நிரூபிக்கும் வகையில் அவர் பிறந்தநாளான ஜூலை17 அன்று விஷ்ணு விஷால் தொடர்ந்து நடிக்கவிருக்கும் ராட்சசன், பொன் ஒன்று கண்டேன், சிலுக்குவார்பட்டி சிங்கம், கதாநாயகன் ஆகிய நான்கு படங்களின் போஸ்டர்கள் வெளியாகின.
இதேபோன்று 2004-ஆம் ஆண்டு அஜித் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி அன்று வெளியான ஜனா திரைப்படத்துடன் அஜித் நடிக்கவிருந்த அட்டகாசம், ஜி, மிரட்டல் ஆகிய படங்களின் போஸ்டர்களும் வெளியாகின. அது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும், ஆச்சர்யத்தையும் உருவாக்கியது. அதைத்தொடர்ந்து இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளிவந்த அட்டகாசம் திரைப்படம் 100 நாட்கள் ஓடி பெரும் வெற்றிப்படமாக அமைந்திருந்தது. நான்காவது போஸ்டராக வெளியான மிரட்டல் படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நாயகியாக அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு அஜித்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் ஒரே நாளில் தன்னுடைய நான்கு படங்களின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மாவீரன் கிட்டு. இப்படத்தில் தலித் மக்களின் உரிமைக்காக போராடும் மாவீரனாக நடித்திருந்தார் விஷ்ணு விஷால். தென்னிந்திய சினிமாவின் முக்கிய கதாநாயகிகளாக கருதப்படும் தமன்னா, கேத்தரின் தெரேசா, அமலா பால், ரெஜீனா காஸண்ட்ரா என அனைவரோடும் நடிக்க உள்ளார் விஷ்ணு விஷால்.
Friday, July 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment