கடந்த சில நாட்களாக தன்ஷிகாவின் அலட்டல் பற்றிதான் அளந்து கொண்டிருக்கிறது இன்டஸ்ட்ரி. கபாலி படத்தின் லிப்ட்டுக்குப் பின் தாட் பூட் தஞ்சாவூராகிவிட்டார் தன்ஷிகா.
(விஷயம் தெரியுமா, இவர் ஒரிஜனல் தஞ்சாவூர் பொண்ணும் கூட) தற்போது அவர் நடித்து திரைக்கு வந்திருக்கும் உரு படத்தின் ஷுட்டிங்கில் ஒரே அலட்டலாம்.
படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து 100 அடி தூரம் கூட இல்லாத ஓட்டலுக்கு சென்று வர ஒரு ஸ்விப்ட் கார் போதாதா? என்னை என்னன்னு நினைச்சீங்க? இன்னோவா வரட்டும்.
அப்பதான் கார்ல ஏறுவேன் என்று கூறிவிட்டாராம்.
முப்பது லட்சம் சம்பளத்தையும் கொடுத்து, இதுபோன்ற கெடுபிடிகளையும் அனுபவித்த தயாரிப்பாளர், படம் வெளிவருதற்கு முன்பே புலம்பி தள்ளுகிறார்.
மற்ற கம்பெனிகளுக்கும் கேட்கட்டும் என்பதுதான் இந்த புலம்பலின் பின்னணி.
Tuesday, July 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment