Wednesday, July 26, 2017

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பதெல்லாம் செட்டப்தான் என்று கூறப்பட்டு வருகிறதல்லவா? ஆனால் உள்ளே போனவர்கள் உண்மையிலேயே வெளியுலக தொடர்பு இல்லாமல்தான் இருக்கிறார்களாம்.

சினேகன், நமீதா போன்றவர்களின் செல்போன் மற்றும் இதர முக்கிய உடமைகள் கூட இங்கு நண்பர்கள் பொறுப்பில்தான் இருக்கிறதாம்.

கையிலிருக்கும் செல்போனில் எப்போதாவது அழைப்பு வரும் காத்திருக்கிறார்கள் போட்டியாளர்களின் நட்பு மற்றும் உறவுகள்.

ஆனால் இன்னொரு பக்கம் ‘தன்னியல்பு’ வோட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள் நமீதாவின் நட்புகள்.

யெஸ்... வாட்ஸ் ஆப் மற்றும் முக நூல் மூலமாக பலரையும் தொடர்பு கொண்டு, “நமீதாவுக்கு வோட்டுப் போடுங்க” என்கிறார்கள்.

ஆனால் நமீதாவுக்கு வோட்டு விழுவதற்கு பதிலாக வேட்டுதான் விழுந்தது.

யெஸ்... இந்த வாரம் நமீதா பேக்கப் ஆகிவிட்டார்.

போகும்போது கூட பரணி என்னை தப்பான கண்ணோட்டத்தில் இடித்தான் என்று கூறிவிட்டுதான் கிளம்பினார்.

என்னே ஒரு சின்சியாரிடி?

0 comments :

Post a Comment

 
Toggle Footer