இளைய தளபதியிலிருந்து தளபதியாக சுருங்கியது ஏன்? இதுதான் விஜய் படத்தின் டைட்டில் அறிவிப்பால் வந்த பரபரப்பு.
‘மெர்சல்’ என்று விஜய் 61 படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விஜய் பிறந்த நாளுக்கு முதல் நாள் மாலை ஆறு மணிக்கு அறிவிப்பு வந்தாலும் வந்தது.
படத்தின் பெயரை கூட விட்டுவிட்டார்கள் அவரது ரசிகர்கள். அதில் பொறிக்கப்பட்ட ‘தளபதி’ நடிக்கும் ‘மெர்சல்’ என்ற வாக்கியத்தை பிடித்துக் கொண்டார்கள்.
அவர் ஏன் தளபதியானார்? கோடம்பாக்கத்தில் தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கெல்லாம் போன் போட்டு பீராய்ந்தவர்களுக்கு ஒரு பலனும் கிட்டவில்லை.
ஆனால் நாம் விசாரித்த வரையில், இப்படியொரு தலைப்பை முடிவு செய்தவர் விஜய் அல்ல.
அட்லீ என்கிறார்கள். படத்தில் அதற்கான பதிலும் இருக்கு என்றாராம். முன்பெல்லாம் ஒரு படத்தின் கதையை பேச வைத்தார்கள்.
இப்போது கண்டதையும் சொல்லி எப்படியாவது அட்ராக்ட் பண்ணப் பார்க்கிறார்கள். இதை சாமர்த்தியம் என்பதா, சரக்கு தீர்ந்து போச்சு என்பதா?
Tuesday, July 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment