“நாம் ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்து, புதிய ஆட்சியை கொண்டு வந்த பொழுது எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றே நம்பியிருந்தோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களைத்தான் தமிழ் மக்கள் கேட்கின்றார்கள். அதற்கு இந்த அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இராணுவத்தினர் இழைத்த பல குற்றங்களுக்கு பதில் சொல்லுவதற்கு தயக்கம் காட்டினாலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தக் கூடிய ஒரு அலுவலகத்தை அமைக்கும் சட்ட மூலத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.
ஆனாலும், இந்த அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விசாரணை நடத்தி நீதியை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்த அலுவலகம் திறக்கப்படும் பட்சத்தில், தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் என்று நம்பினோம்: மாவை சேனாதிராஜா
Monday, July 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment