Monday, July 24, 2017

அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களை நடிகர் கமல் ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபகாலமாக தமிழக அரசை கடுமையாக சாடி வருகிறார் கமல் ஹாசன். அவருடைய சாடலுக்கு தமிழக அமைச்சர்கள் பலரும் எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசை கண்டித்து சென்னையின் பல இடங்களில் கமல் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இந்தச் சுவரொட்டிகள் சமூகவலைத்தளத்திலும் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தரம் தாழாதீர். வசைபாடி சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப் போகட்டும். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை. இவருக்கு பதிலளிக்க நானே போதும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer