மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு (SAITM -South Asian Institute of Technology and Medicine) சொந்தமான நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசாங்கம் இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றது. இதற்கான ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
குறித்த வைத்தியசாலை மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் போதான வைத்தியசாலையாக இயங்கி வந்தது. ஆயினும் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற நிலையில், குறித்த வைத்தியசாலையில் நோயாளிகளின் வருகை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டமையினால், அதன் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்கும் முடிவிற்கு அமைச்சரவை அனுமதியளித்ததை அடுத்து, இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் குறித்த வைத்தியசாலையை உத்தியோகபூர்வமாக அரசாங்கம் கையேற்கும் ஒப்பந்தத்தில் கலாநிதி நெவில் பெர்ணான்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
Tuesday, July 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment