கடந்த வார இறுதியில் கிழக்கு சீனக் கடற்பரப்பில் 300 அடி உயரத்தில் பறந்த அமெரிக்க வேவு விமானத்தை இரு சீன ஜெட் விமானங்கள் இடைமறித்ததாக திங்கட்கிழமை அமெரிக்கா அறிவித்துள்ளது.
கிழக்கு சீனக் கடற்பரப்பில் கதிர்வீச்சைக் கண்டு பிடிப்பதற்காக குறித்த அமெரிக்க விமானம் முயன்றதாகவும் ஆனால் சீன ஜெட் விமானங்கள் இடைமறித்ததால் பாதையை மாற்றி சென்றதாகவும் கூறப்படுகின்றது. சீன நகரான குயிங்டாவோ இலிருந்து 148 Km தொலைவில் கிழக்கு சீனக் கடலுக்கு மேலே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தில் இடை மறித்த சீன ஜெட் விமானங்கள் ஆயுதம் தாங்கி இருந்ததாகக் கூறப்படுகின்றது.
இச்சம்பவம் பாதுகாப்பின்மையை உணர்த்துகின்றது எனப் பெண்டகன் அறிவித்துள்ள நிலையில் சீன அரசோ தமது இறையாண்மை மற்றும் உரிமைக்கு ஏற்பாக சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே சீன ஜெட் விமானங்களின் பைலட்டுக்கள் செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா இது போன்ற பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இராணுவ வேவு பார்க்கும் பணிகளை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சீனா காட்டமாக அறிவித்துள்ளது.
Home
»
World News
»
கிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விமானத்தை இடைமறித்தன சீன ஜெட் விமானங்கள்
Tuesday, July 25, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment