“ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடுக்கும் தம்பி மாண்புமிகு. ஜெயக்குமாரோ, அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச்.ராஜாவோ நான் அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்று இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதிதான்.” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் படிந்துள்ளது என்று கமல்ஹாசன் கூறினார். அன்றிலிருந்து தமிழக முதல்வர், தமிழக அமைச்சர்கள் அனைவரும் அவருக்கு எதிராக எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். இந்த நிலையில், பா.ஜ.க.வின் எச்.ராஜாவும் கமல்ஹாசனை இன்று புதன்கிழமை விமர்சித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதிலேயே, தான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, July 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment