பிரசவத்தின் போது இளம் பெண்ணும், அவரின் இரு குழந்தைகளும் மரணமடைந்த விவகாரம் புதுவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவையில் முத்திரையர்பாளையம் எனும் பகுதியில் வசிப்பர் விக்னேஷ்(27). இவரின் மனைவி திவ்யா (24). இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால், அவர்களுக்கு குழந்தை உருவாகவில்லை. எனவே, டெஸ் டியூப் மூலம் (செயற்கை முறை) குழந்தை பெறும் முடிவிற்கு அவர்கள் வந்தனர். எனவே, அதற்காக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் கர்ப்பமான திவ்யாவிற்கு கடந்த 23ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் திவ்யா அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் அவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தான. ஆனால் சிறிது நேரத்தில் திவ்யாவும், அவரின் 2 குழந்தைகளும் அடுத்தடுத்து இறந்தனர். இதனையடுத்து, திவ்யாவிற்கு மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையே இதற்கு காரணம் என கூறிய திவ்யாவின் உறவினர்கள்,
அந்த மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அதன் பின் போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும், திவ்யாவின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர்கள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Wednesday, July 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment