Tuesday, July 25, 2017

கக்கூஸ் ஆவணப்பட இயக்குனரும், சமூக செயற்பாட்டாளருமான திவ்யபாரதி இன்று காலை மதுரையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

8 ஆண்டுகளுக்கு முன்பு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோது, பாம்பு கடித்து உயிரிழந்த சக மாணவரின் சடலத்தை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதற்காக திவ்யபாரதி மற்றும் அவரது நண்பர் நிஜாம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

‘2009-ஆம் ஆண்டு மாணவர் போராட்ட வழக்கில் அரெஸ்ட் வாரண்ட் பெற்று சற்றுமுன் வீட்டிற்கு வந்து காவலர்கள் மதுரை ஜே.எம்- 2 நீதிமன்றத்தில் என்னை ஆஜர்படுத்தியிருக்கிறார்கள் #தொடங்கிடுச்சு’ என அவர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 12-ஆம் தேதி கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததற்காக வளர்மதி எனும் மாணவி குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மதுரை ஜே.எம்2 நீதிமன்றத்தில் நீதிபதி சக்திவேல் முன் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து நீதிபதி சக்திவேல், திவ்யாபாரதியை ஆகஸ்டு 8-ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். பின்னர் திவ்யபாரதியின் ஜாமின் வழக்கை ஏற்று அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer