மக்கள் வழங்கிய ஆணைக்கு இணங்க புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தெஹியத்த கண்டியவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “புதிய அரசியலமைப்பில் ஒற்றை ஆட்சிக்கு எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது. அதுபோலவே, பௌத்த மதத்தின் முன்னுரிமைக்கு எவ்வித பங்கமும் ஏற்படுத்தப்படாது. குறிப்பாக பௌத்த மதம் தொடர்பான அத்தியாயங்கள் மாற்றம் செய்யப்படாது.
அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எதிர்பார்ப்புகள் உள்ளன. மக்கள் தமது ஒவ்வொரு தொகுதிக்கும் தனியான பிரதிநிதி தேவை என்று கருதுகின்றனர். எனவே புதிய அரசியலமைப்பில் புதிய தேர்தலுக்கு முன்னுரிமை கொடுக்கின்றோம்.” என்றுள்ளார்.
Wednesday, July 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment