புதிய அரசியலமைப்புக்கு எதிராக பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை வேதனைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்களில் வடக்கு- கிழக்கு இணைப்பு இல்லை, அதிகாரங்கள் கொடுக்கப்படத் தேவையில்லை, அரசியலமைப்பே தேவையில்லை என்று மகாநாயக்கர்கள் கூறி வருவதானது, பாதிக்கப்பட்டு வலிகளையும் வேதனைகளையும் சுமந்து நிற்கின்ற மக்களுக்கு பாரிய வெடிகுண்டுகளை தலையில் போட்டதற்கு சமமாகும்.
தமிழ் மக்கள் தமக்கு நீதியான தீர்வையே வேண்டி நிற்கின்றனர். இந்த விடயத்தில் அஸ்கிரிய போன்ற உயர் பீடங்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளையும் வலிகளையும் உணர்ந்து, மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் சிங்கள சமூகத்தின் மத்தியிலும், பௌத்த உயர்பீட மகாநாயக்கர்கள் மத்தியிலும் முழுமையாக கொண்டுசெல்லப்படாத சூழல் நீண்டகாலமாக இருந்து வருகின்றது. தமிழ் மக்களை சிங்கள சமூகம் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
பௌத்த மகாநாயக்கர்களின் கருத்துக்கள் தமிழ் மக்களை வேதனைப்படுத்துகின்றன: எஸ்.வியாழேந்திரன்
Sunday, July 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment