சட்டத்தை கையிலெடுத்து அநீதி இழைப்பதற்கான எந்த அதிகாரமும் பொலிஸாருக்கு இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சட்டத்தை நடைமுறைப்படுத்தவே பொலிஸாருக்கு உரிமையுள்ளது. அதனை மீற அனுமதியில்லை.
இதற்கமைய, யாழில் இடம்பெறும் சட்டவிரோத மண் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து சட்டத்தை அமுல்டுத்த பொலிஸாருக்கு முடியும். பொலிஸார் செய்ய வேண்டியது, சட்டத்தின் ஊடாக குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதே தவிர, அவர்களைக் கொலை செய்வதல்ல.
வடமராட்சிக் கிழக்கு சம்பவத்தில் பொலிஸார் சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.
Wednesday, July 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment