Wednesday, July 26, 2017

பாராளுமன்றக் கூட்டத் தொடர்களின் போது பா.ஜ.க உறுப்பினர்களின் வருகை குறைவாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அதிருப்தி வெளியிட்டுள்ளார். டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “பாராளுமன்றத்துக்கு பா.ஜ.க. உறுப்பினர்களின் வருகை எனக்கு திருப்தி அளிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதனை சரி செய்ய வேண்டும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer