கிரிக்கெட் எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தேவையான ஒன்று தான் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சிந்திப்பில் அவர் கூறியதாவது,
பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது கூட்டு குடும்பத்தின் அச்சாரமான கூடி வாழ்தல் முறையை பேசுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த தவறும் இல்லை, அந்த நிகழ்ச்சி மிகச்சரியாகவே நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே இந்தியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிதான். ஒருவேளை இந்தி தெரியாமல் இருப்பதால் என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி புரியாமல் இருக்கலாம்.
கிரிக்கெட் எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தேவையான ஒன்று தான். பிக் பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சாரம் கெடுகிறது என்றால் முத்த காட்சியில் நடித்தபோது ஏன் எதிர்க்கவில்லை?
என்னை நம்பும் மக்களுக்கு நல்ல விருந்தளிக்க கடமை பட்டிருக்கிறேன் மற்றவர்களுக்கு அல்ல. என்னை கைது செய்யக்கோரும் கூட்டத்திற்கு நான் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டம் என்னை பாதுகாக்கும், சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பை நான் முற்றாக எதிர்க்கவில்லை, அதில் சில நெருடல்கள் தான் இருக்கிறது. ஜிஎஸ்டி வரி நாங்கள் கோரியது போல் குறைக்கவில்லை, ஆனால் வரி குறைக்கப்பட்டிருக்கிறது. அதை மனதார பாராட்டுகிறோம். தமிழ்திரையை நசுக்கும் எந்த காரியத்தையும் அரசு மேற்கொள்ள கூடாது, மேசைக்கு அடியில் நடைபெறும் பேரமும் வேண்டாம். குளிர்பானங்களுக்கு கொடுக்கும் மரியாதையை கூட திரையரங்கு கட்டண வடிவத்திற்கு கொடுக்காதபோது எனக்கு கோபம் வரும்.
பாவனா கடத்தல் வழக்கில் சட்டம் சரியாக செயல்பட்டிருக்கிறது, பாதிக்கப்பட்டவர் பக்கம் நான் இருக்கிறேன். சைவம் என்பதற்கு வேறு பொருள் இருக்கிறது, ஆனால் இங்கு மதத்தோடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறுது சைவம் ஒரு வழிமுறை தான். நடிகர் ரஜினிகாந்த் சிஸ்டம் சரியல்ல என்ற கருத்தை நான் எதிர்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுளளார்.
Home
»
Chinnathirai
»
கிரிக்கெட் எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தேவையான ஒன்று தான்: கமலஹாசன்
Thursday, July 13, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment