வவுனியா - இறம்பைக்குளம் நடராஜானந்தா வித்தியாலய ஓலைக் கொட்டகையின் கூரையில் கடந்த சில நாட்களாக வெள்ளை நாகம் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மாணவர்கள் அச்சத்துடனனேயே கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்திருந்த இடத்தில் உள்ள நடராஜானந்தா வித்தியாலயம் போதிய அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் ஒரு ஓலைக் கொட்டகையில் இயங்கி வருகின்றது. இங்கு தரம் 5 வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பாடசாலையின் ஓலைக் கொட்டகையின் கூரையில் வெள்ளை நிற நாக பாம்பு ஒன்று அடிக்கடி வந்து செல்வதாகவும், இதனால் மாணவர்கள் அச்சத்துடனேயே கல்வி கற்க வேண்டியுள்ளதாகவும், ஆசிரியர்களும் அச்சத்துடனேயே கல்வியைப் கற்பிக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த பாடசாலைக்கு கட்டடம் ஒன்று அமைப்பதற்காக கடந்த சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Thursday, July 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment