Tuesday, July 11, 2017

விஜய் டி.வியிலிருந்து சன் டி.விக்கு மாறிவிட்டார் சிவகார்த்திகேயன். பொதுவாகவே சிவா படங்களின் தொலைக்காட்சி உரிமையை விஜய்தான் வாங்கும்.

இந்த முறை சிவாவின் நண்பர் ராஜா தயாரிப்பில் உருவாகவிருக்கும் பொன்ராம் காம்பினேஷன் படத்தை சன் டி.வி வாங்கியிருக்கிறது.

தொலைக்காட்சி வட்டாரங்களில் இந்த விஷயம் படு சுவாரஸ்யமாக அலசப்பட, இதன் பின்னணியில் இன்னொரு வியாபார சூட்சுமம் இருப்பதாக காதை கடிக்கிறது இன்டஸ்ட்ரி.

மீண்டும் படு வேகமாக படத் தயாரிப்பில் இறங்கிவிட்டது சன். விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியை அடுத்து, அவர்களின் குறி சிவகார்த்திகேயனை நோக்கிதானாம்.

அதற்கான முன்னோட்டம்தான் இந்த சேட்டிலைட் பரிசு. ஒவ்வொரு படியாக ஏறிவந்த சிவா, ஒரேயடியாக முன்னேறி வருவதில் எல்லாருக்கும் மகிழ்ச்சியே!.

0 comments :

Post a Comment

 
Toggle Footer