Saturday, July 1, 2017

“இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நள்ளிரவைப் போல, சரக்கு சேவை வரி (GST) அறிமுகமாகும் இந்த நள்ளிரவும் முக்கியமானது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சரக்கு சேவை வரி (GST) அறிமுக விழாவில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் எதிர்கால பாதையை நள்ளிரவில் முடிவு செய்கிறோம். இது ஒரு கட்சிக்கான வெற்றியல்ல, அரசிற்கான வெற்றியல்ல. நாட்டிற்கான வெற்றி. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த உதாரணம். தேசிய வளர்ச்சிக்கான திட்டம்.

பல ஆண்டுகள் கழித்து, இந்த மைய மண்டபத்தில் மிக முக்கியமான வரலாற்று நிகழ்ச்சி நடக்கிறது. பொருளாதாரம் தொடர்பான முக்கிய நிகழ்வு இது. நாட்டில் புதிய பரிணமத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் சரக்கு, சேவை வரி குறித்து பேசியிருக்கிறார்கள். அந்த விவாதங்கள் தான் இந்த சரக்கு, சேவை வரி சுதந்திர நள்ளிரவை போல இந்த நள்ளிரவும் முக்கியமானதாகிறது. கீதையில் 18 அத்தியாயங்கள் இருப்பதைப் போன்று 18 கூட்டத்திற்கு பிறகு இந்த வரி அறிமுகமாகியுள்ளது.

முதலில் மாநிலங்களுக்க நிறைய சந்தேகம் இருந்தது. தொடர்ந்து ஆலோசிக்கப்பட்ட பிறகு அது களையப்பட்டது. சர்தால் படேல் 500 பகுதிகளை சேர்த்து ஒரு தேசமாக காட்டினார். அதுபோலத் தான் பல வரிகள் ஒன்று சேர்ந்து சரக்கு, சேவை வரியாக உருவாகி உள்ளது. ஒரே தேசம், ஒரே வரி கனவு நனவானது. ஊழல், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் இந்த வரி ஒழிக்கும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer