Saturday, July 29, 2017

மேஷம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறை
வேற்றுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

மிதுனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். திடீர் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்: பேச்சிலே ஒரு கம்பீரம் தெரியும். குடும்பத் தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தோற்றப் பொலிவு கூடும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத் தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபா ரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

துலாம்: குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் வந்து போகும். சொந்த-பந்தங்களின் அன்புத் தொல்லை அதிகரிக் கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக் கும். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

தனுசு: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பிரியமானவர்களுக்
காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். வாகன வசதி பெருகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக் கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத் தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

மீனம்: சவாலான வேலை களையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பிள்ளைக ளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. திருமண பேச்சு வார்த்தை கூடி வரும். புது நட்பு மலரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் வெற்றி பெறும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer