Tuesday, July 25, 2017

மேஷம்: மாறுபட்ட அணுகு முறையால் சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளை களால் நிம்மதி அடைவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பங்கு தாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.  நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்:  உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும்  நாள்.

மிதுனம்:  உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிகொள்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.  விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

கடகம்: காலை 9.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும்  குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது.  மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

சிம்மம்: காலை 9.15 மணி முதல் குடும்பத்தினருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். சகோதர வகையில்  சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.

கன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். பணவரவு உண்டு. பழைய சொத்து சிக்கலில் ஒன்று  தீரும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். இனிமையான நாள்.

துலாம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.  வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.  

விருச்சிகம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அதிகாரபதவியில் இருப்பவர்கள்  அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

தனுசு: காலை 9.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும்  நாள்

மகரம்: காலை 9.15 மணி முதல் கணவன்-மனைவிக்குள் விவாதம் வந்துப் போகும். கணுக்கால் வலிக்கும். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் ஓரளவு  வேலைச்சுமை குறையும். போராடி வெல்லும் நாள்.

கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வீட்டு விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். சகோதரி உதவுவார். வெளியூர்  பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம்  கிட்டும் நாள்.

மீனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள்.  நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புதுமை  படைக்கும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer