Tuesday, June 6, 2017

மீண்டும் காதலின் ஒரு புதிய அத்தியாயத்தை சொல்லவருகிறார் காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் மற்றும் மாரி ஆகிய படங்களின் இயக்குனர் பாலாஜி மோகன். இந்த நவீன உலகத்தில்  நான்கு ஜோடிகளின் வாழ்க்கையையும், அதில் அவர்களுக்கு  இடையே நடக்கும் காதல் சண்டைகள்  தான் கதையின் கருவாக வைத்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

இந்த வலைத்தொடரில் பல திரைப்பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். சுந்தர் ராமு, தான்யா பாலகிருஷ்ணா, பேபி யுவினா, நட்சத்திரா நாகேஷ், சனத் ரெட்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் மற்றும் சஞ்சனா போன்றவர்கள் நடித்துள்ளனர்.

இந்த வலைத்தொடரைப் பற்றி இயக்குனர் பாலாஜி மோகன் கூறுகையில், “தற்போது வலைத்தொடர் கதைகள் இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன. அதில் சில வலைத்தொடர்கதைகள் மட்டுமே கவனிக்கப்படுகின்றன. என்னுடைய கதை காதலில் சொதப்புவது எப்படி படத்தின் அடுத்தகட்ட வடிவம் தான் "As i am suffering from kadhal".

முதலில் இந்த வலைத்தொடரை முழுநீளப் படமாக எடுக்க இருந்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன். பிறகு  இக்கதையில் வரும்  கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இதை வலைதொடராக எடுத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்திருக்கிறார். மேலும், மக்களை தொடர்ந்து பார்க்க வைப்பதென்பது சவாலான ஒரு காரியம். பல புதிய விஷயங்கள் உருவாகின்றன. ஆனால், இந்த வலைத்தொடர் சினிமா கலாச்சாரம் மேற்கு பகுதியில் ( Western/European culture)முன்னிருந்தே பிரபலம் தான்.

இந்தத் தொடரின் நடிகர்களும், தரமான தயாரிப்பு நிறுவனமும் தான் இந்த முயற்சி வெற்றிபெற காரணம். இன்னும் பரவலான விஷயங்கள் வலைத்தொடரில் வர காத்திருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் பாகத்தை கடந்த நவம்பரில் 25 நாட்கள் எடுத்தோம். அடுத்து வரவிருக்கும் பாகங்களைத் தொடர்ந்து சரியான இடைவேளைக்கு பின்னர் வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.

ஆண்ட்ரியா, ரோபோ ஷங்கர், VJ ரம்யா ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர். குறும்படங்களை விட இந்த மாதிரியான வலைத்தொடர்கள் மக்களை பார்க்க வைக்கத் தூண்டுபவையாக இருக்கும்.

மாரி 2-ஆம் பாகம் பற்றி கேட்டபோது, இயக்குனர் பாலாஜி மோகன் தனுஷின் ஹாலிவுட் படம், வட சென்னை இவ்விரண்டு படங்கள் முடிவடைந்ததும் மாரி 2-ஆம் பாகத்திற்கான வேலையைத் தொடங்குவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer