மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி (SAITM -South Asian Institute of Technology and Medicine) விவகாரத்துக்கு தீர்வொன்றை வழங்காவிட்டால், அரசாங்கத்தில் உள்ள சிலரையும் இணைத்துக் கொண்டு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுர குமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ‘பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்’ குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சைட்டம் விவகாரம் அரசாங்கத்துக்குள்ளும் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. இலவசக் கல்வியை பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள் அரசாங்கத்துக்குள் இருக்கின்றனர். எதிர்க்கட்சியில் பல விடயங்களில் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், சைட்டம் விவகாரத்தில் சகலரும் ஒன்றிணைந்துள்ளோம். அரசாங்கத்தில் இருப்பவர்களையும் இணைத்து அரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டம் முன்னெடுக்கப்படும்.
பல்கலைக்கழக மாணவர்கள் நிராயுதபாணிகளாகவே சென்றனர். அவர்கள் இரும்பு பொல்லுகளுடன் சென்றிருக்கவில்லை. சைட்டம் மூடப்படாவிட்டால் இரும்பு பொல்லுகளுடன் நாம் வரவேண்டியிருக்கும்.
வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தோல்வியடைந்திருப்பதாக அரசாங்கம் கேலி செய்கிறது. இதனால் பணியாற்றும் வைத்தியர்களையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு அரசாங்கம் தூண்டுகிறது. பொறுப்பற்ற விதத்தில் அரசாங்கம் செயற்படுகிறது.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
சைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: அநுரகுமார திசாநாயக்க
Saturday, June 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment