1996 ஆம் ஆண்டு முதல் அப்போதைய அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஹிலாரி கிளிங்டன் தலைமையில் முதல் ரம்ஷான் இரவு விருந்து வெள்ளை மாளிகையில் அளிக்கப் பட்டது.
இப்பழக்கம் அதிபர் ஜோர்ஜ் W புஷ் மற்றும் ஒபாமாவின் பதவிக் காலங்களிலும் பின்பற்றப் பட்டது. ஆனால் முதன்முறையாக அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் இம்முறை ரம்ஷான் விருந்து இடம்பெறாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளதுடன் வெள்ளை மாளிகையில் இருந்து வெறும் வாழ்த்துச் செய்தி மட்டும் வெளியிடப் பட்டுள்ளது.
மறுபுறம் ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரியதும் பழமைப் பெருமையும் உடையதான மோசுல் நகரில் பல வருடங்களுக்குப் பிறகு ISIS தீவிரவாதிகள் ஆதிக்கம் இல்லாத ஒரு அமைதியான சூழலில் இம்முறை அங்குள்ள முஸ்லிம்கள் ரம்ஷான் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். மோசுலில் இருந்து மிக அதிகப் படியான ISIS தீவிரவாதிகள் பின்வாங்கியுள்ள நிலையில் இன்னும் சில நாட்களுக்குள் ISIS வசமுள்ள எஞ்சியுள்ள பகுதிகளையும் கைப்பற்றி விட முடியும் என அங்குள்ள மக்களால் எதிர்பார்க்கப் படுகின்றது.
ஆனாலும் இன்னமும் மேற்கு மோசுல் உட்பட்ட சில பகுதிகளில் 50 000 இற்கும் மேற்பட்ட மக்கள் ISIS இன் பிடியில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Home
»
World News
»
வெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை! : ஈராக்கின் மோசுலில் ISIS இல்லாத நிலையில் முதல் ரம்ஷான் கொண்டாட்டம்
Monday, June 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment