அண்மையில் சர்வதேசத்தின் எதிர்ப்பை மீறி 280 மைல் தூரம் பயணித்து இலக்கைத் தாக்கக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனையை வடகொரியா பரிசோதித்திருந்தது.
இதற்குப் பதிலடியாக அமெரிக்கா கலிபோர்னியாவில் ஏவுகணையை வானில் இடைமறித்துத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. பசுபிக் சமுத்திரத்தில் உள்ள தீவொன்றில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றை கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக வானில் இடைமறித்துத் தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் உறுதிப் படுத்தியுள்ளது.
மறுபுறம் ரஷ்யாவும் மத்தியதரைக் கடலில் இருந்து சிரியாவில் உள்ள ISIS இன் இலக்குகளைக் குறி வைத்துத் தாக்கும் ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தியுள்ளது. இது குறித்து இன்று புதன்கிழமை ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவலில் மத்திய தரைக் கடலில் நிலை கொண்டுள்ள ரஷ்யாவின் போர்க் கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சிரியாவின் பல்மைரா நகரிலுள்ள ISIS இலக்குகளைத் தாக்கும் விதத்தில் 4 மத்திய ரக ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவியிருந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இத்தாக்குதலை நடத்த முன் அமெரிக்கா, துருக்கி மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்ததாகவும் இலக்கு வைக்கப் பட்ட அனைத்து இடங்களும் அழிக்கப் பட்டுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உறுதிப் படுத்தியுள்ளது.
Home
»
World News
»
வடகொரியாவுக்குப் பதிலடியாக அமெரிக்காவும் ISIS மீது இலக்காக ரஷ்யாவும் ஏவுகணைப் பரிசோதனை
Thursday, June 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment