Saturday, June 10, 2017

பாகிஸ்தான் இராணுவம் கடந்த வாரம் பலூசிஸ்தான் மாகாணத்தில் மஸ்துங் பகுதியில் மேற்கொண்ட மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ISIS தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய 12 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டதாக அறிவித்துள்ளது.

மலைப்பாங்கான இப்பகுதிகளில் 3 நாட்கள் மேற்கொள்ளப் பட்ட அதிரடி நடவடிக்கையில் கொல்லப் பட்ட தீவிரவாதிகள் லஷ்கர் ஏ ஜாங்வி அல் அலாமி குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தீவிரவாதிகள் வேட்டையாடப் பட்ட பகுதியில் ஏராளமான ஆயுதங்கள், தற்கொலை அங்கிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், ராக்கெட் இலாஞ்சர்கள் என்பன கைப்பற்றப் பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை பலூசிஸ்தான் மாகாணத்தில் அண்மையில் கடத்தப்பட்டு கொல்லப் பட்ட ஒரு பெண் அடங்கலான 2 சீன பிணைக் கைதிகளின் கொலைக்கு ISIS தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

மறுபுறம் இன்று வெள்ளிக்கிழமை ஈராக்கின் பக்தாத் நகரில் தெற்கே உள்ள முஸ்ஸாயிப் நகரில் உள்ள சந்தை ஒன்றின் மீது ISIS தீவிரவாதிகள் தொடுத்த தற்கொலைக் குண்டு தாக்குதலில் 20 பேர் கொல்லப் பட்டும் 34 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். மேலும் கர்பாலா நகரிலுள்ள ஷைட்டி மதத் தலம் ஒன்றைக் குறி வைத்து நடத்த முயன்ற தாக்குதல் தோல்வியில் முடிந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer