Monday, June 5, 2017

காலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கும் நடிகை ஹுமா குரேஷி,  காலா படத்தில் அவர் ஏற்று நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தைப் பற்றி ட்விட்டர் வலைதளத்தில் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

சரீனா என்கிற முஸ்லீம் பெண்ணாக நடிக்க இருப்பதாகப் பதிவிட்டிருக்கும் ஹுமா குரேஷி, தற்போது சரீனா கதாபாத்திரமாக மாறுவதற்கு தயாராகி கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் 40 நாட்கள் எடுக்க இருக்கிறார்கள்.

அடுத்த கட்டமாக படத்தின் கலை துறையினர் மும்பையின் தாராவி குடிசைப்  பகுதியைப்  போல் சென்னையில் வடிவமைக்க இருக்கின்றனர். ரஜினிகாந்த் காலா படத்தில் அந்த குடிசைப் பகுதியின் தலைவராக நடிக்கிறார்.

காலா படத்தில் அஞ்சலி பாட்டீல், நானா படேகர், சமுத்திரக்கனி மற்றும் சாக்க்ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் அடுத்தாண்டு ஜனவரி 25 அன்று  வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer