உலக அரங்கில் சீனாவின் ஒரே சீன ஒரே இணைப்புக் கொள்கைக்கு ஆதரவாகவும் நெருங்கிய நட்பு நாடாகவும் பாகிஸ்தான் திகழ்ந்து வருகின்றது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனாவுடன் பொருளாதார சாலை திட்டத்தை முன்னெடுக்கவும் ஆதரவு தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் கடந்த இரு நாட்களாக நடைபெற்று வருகின்றது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை உறுப்பு நாடுகளாகவும் இந்தியாவும், பாகிஸ்தானும் பார்வையாளர்களாக 2005 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்ததுடன் கடந்த 9 ஆம் திகதி முதல் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும் அங்கீகரிக்கப் பட்டன. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடிய போதும் நட்பு நாடான பாகிஸ்தானின் அதிபர் நவாஸ் ஷெரீஃபுடனான சந்திப்பை அவர் புறக்கணித்துள்ளார். இந்நடவடிக்கை அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த விசித்திர நடவடிக்கைக்குக் காரணமாக சமீபத்தில் பாகிஸ்தானின் குவெட்டா நகரில் கடத்தப் பட்ட இரு சீன தேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்களைத் தாம் கொன்று விட்டதாக ISIS தீவிரவாதிகள் அறிவித்தமை கூறப்படுகின்றது. இச்சம்பவம் சீன மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் இந்த ஒரு சூழலில் நவாஸ் ஷெரீஃபுடன் உரையாடுவது உகந்ததாக இருக்காது என அதிபர் ஜின்பிங் கருதியிருக்கலாம் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Home
»
World News
»
பாகிஸ்தான் குவெட்டா நகரில் சீன ஆசிரியர்கள் கொலை எதிரொலி! : பிரதமர் நவாஸுடன் சந்திப்பைத் தவிர்த்தார் சீன பிரதமர் ஜின்பிங்
Monday, June 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment