கிளிநொச்சி– இரணைதீவு பகுதியில் மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
தமது பூர்வீக வாழ்விடமான இரணைதீவினை தங்களிடம் கையளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இரணைதீவு மக்கள் கடந்த 60 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், அவர்களுக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் இன்று புதன்கிழமை சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இதன்போது, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டவர்களும் உடனிருந்தனர்.
Wednesday, June 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment