'பாகுபலி' படத்தையே மிஞ்சும் அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள படம் 'சங்கமித்ரா'. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியானது பிரான்ஸில் கான் திரைப்பட விழாவில் அரங்கேறிய நிகழ்வு அனைவரும் அறிந்ததே. இவ்விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குநர் சாபுசிரில் என அனைவரும் கலந்து கொண்டதோடு, படம் குறித்த சில தகவல்களையும் வெளியிட்டிருந்தனர்.
மன்னர் காலகட்டத்தில் நடக்கும் கதைக்களம் என்பதால் போர் சண்டைக்காட்சிகளுக்காக வாள் பயற்சி, குதிரையேற்றம் போன்றவற்றை கற்று வந்த ஸ்ருதி ஹாசன்... சங்கமித்ரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தார் . ஆனால் கடந்த வாரம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஸ்ருதிஹாசன் ‘சங்கமித்ரா’விலிருந்து விலகுவதாக தயாரிப்பு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, ஹன்சிகா ஆகியோர் பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நயன்தாராவிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே ‘காஷ்மோரா’ படத்தில் இளவரசியாக நடித்த கதாபாத்திரம் கனகச்சிதமாக அவருக்கு பொருந்தியதால்... ‘சங்கமித்ரா’ கதாபாத்திரமும் அவருக்கு மிகப்பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் கருதுவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் நயன்தாரா ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இதற்கு நயன்தாரா தரப்பிலும் ஓகே சொல்லிவிட்டால். கூடிய விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.
Wednesday, June 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment