Monday, June 5, 2017

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசின் அறிவித்தலுக்கு எதிரான யோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்துள்ளார்.

கால்நடை சந்தைகளில், இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ், இந்நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்த தடை, குறிப்பிட்ட தரப்பினரின் உணவு பழக்கத்தில் குறுக்கிடும் செயல் என்றும், இந்த தடையால் தோல் பொருள் வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பான ஒரு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, மத்திய அரசின் அறிவிக்கைக்கு 4 வார இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கான தடைக்கு எதிரான யோசனைகளை பரிசீலிக்க தயார் என்று அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer