உலகில் எந்தவொரு நாட்டிலும் காணமுடியாதளவு தியாகமும் மனிதாபிமானமும் இலங்கை மக்களிடம் காணப்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
“நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது அன்பு, கருணை மற்றும் தியாக சிந்தையுடன் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பக் கண்ணீருடன் இணைந்து அவர்களை ஆற்றுப்படுத்துவதற்காக அனைத்து மக்களும் ஓரணியில் திரண்டதற்கு பௌத்த தத்துவத்தின் அடிப்படையிலான உன்னத மனிதாபிமான பண்புகள் இலங்கை மக்களின் இதயங்களில் நிறைந்துள்ளமையே காரணமாகும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெந்தர விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புத்த சிலையை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
Home
»
Sri Lanka
»
உலகில் எங்கும் காணமுடியாதளவு தியாகமும் மனிதாபிமானமும் இலங்கையர்களிடம் உண்டு: ஜனாதிபதி
Thursday, June 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment